உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத் மீண்டும் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனை செய்வதற்கான காலம் இன்றுடன் நிறைவு…

wpengine

மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு கோப் குழு முன்னிலையில் இன்று விசாரணை

wpengine

O/L மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை

wpengine