உள்நாட்டு செய்திகள்

நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3 பேர் ஹெரோயினுடன் கைது



கொழும்பின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 3 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸ்ஸ – சட்டிகல மாவத்தை பிரதேசத்தில் நேற்று 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று(11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , பொரளை – வெலிகட சிறைச்சாலைக்கு அருகில் 24 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மட்டக்குளி – கதிரான தோட்டம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 55 வயதுடைய சந்தேகநபரொருவர் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோத்தவுக்காக பொய்சாட்சியமளித்த முன்னாள் இராணுவ அதிகாரிக்கு எதிராக வழக்கு

wpengine

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 19 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு நாளை முதல் அமுலில்

wpengine