உள்நாட்டு செய்திகள்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதியவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நியமனக் கடிதம் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் புதிய தலைவரிடம் இன்று (01) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராகவும் நீல் டி அல்விஸ் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிபர் பதவிக்கான வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சையானது ஒத்திவைப்பு..

wpengine

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

மே 08 ஆம் திகதி முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்…

wpengine