உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை மின்செயற்பாடுகள் படிப்படியாய் வழமை நிலைக்கு


நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 300 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு தற்போதைய நிலையில் வழங்கப்படுகின்றது.

மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷணா ஜயவர்தன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தியை இன்று காலை முதல் தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் இன்று இரவாகும் போது, 24 மணி நேரம் மின்விநியோகத்தை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 900 மெகாவோட் மின்சாரம், தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

wpengine

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

wpengine

பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி – மீட்புப்பணிகள் தொடர்கிறது..

wpengine