வணிகம்

நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் ஏற்பாடு…



எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போது இருந்தே கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 400 சதொச விற்பனை நிலையங்கள் இயங்குவதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் மொஹமட் ரிஸ்வான் ஹமீட் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்திற்கு முன்னர் மேலும் 15 விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வு பொருள்களை தேவையான அளவு களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் அவற்றை விற்பனை கிளைகளுக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் இடம்பெயர் விற்பனை சேவையும் நடைபெறும். சலுகை விலையில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களை விநியோகிக்கவும் சதொச தயாராகி வருகிறது.

மேலும், விசேட விலைக் குறைப்பை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சதொச தலைவர் மொஹமட் ரிஸ்வான் ஹமீட் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் வரிகள் இரத்து

wpengine

ட்ரம்பின் புதிய வரி கொள்கையால் நாட்டின் ஆடைத் துறைக்கு பாதிப்பா?

Azeem Kilabdeen

இலங்கையின் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்கிறது கொரியா

wpengine