உள்நாட்டு செய்திகள்

நீர்க்கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும்..



நீர்க்கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பொனாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. எனவே விரைவில் நீர்க் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது 1000L நீர் 12 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது. எனினும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் 1L 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதற்கு கூடுதலான செலவு ஏற்படுகின்றது. எனினும், நீர்க்கட்டணங்களை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

விமலுக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரையில் ஒத்திவைப்பு…

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வு குழு…

wpengine

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

wpengine