ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்; அப்படியே விட்டுவிட வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேவையின்றிப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் சர்ச்சைகள் நீடித்துவருகின்றது. அதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை கிருலப்பனையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது., அதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளகத்தில் விகாரை அமைத்த, கொலம்பகே மேதாலங்கார தேரர் அண்மையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.

பின்னர், உயிரிழந்த தேரரின் உடலை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு தடைவிதிக்கக் கோரி, ஆலய நிர்வாகம் சார்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர், ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று நீதிவான் உத்தரவிட்டார்.

நீதிமன்றக் கட்டளை எழுத்து மூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குகள் சடலத்தை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பில் லேும் கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது.
இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Related posts

“ரதன தேரர் தான் கோட்டாபயவை அழித்தது, விவசாயத்தினை நாசம் செய்தது” – டயானா கமகே

wpengine

வெனி­சு­லாவில் மின் தட்­டுப்­பாடு அரச ஊழி­யர்­க­ளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பணி

wpengine

அஜந்த மென்டிசையும் தாண்டி சமி இந்தியாவிலேயே முதலிடத்தில்…

wpengine