உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக அரசினாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை..



நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள சிலரே தயாராகி வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இந்த பிரேரணையை அரசாங்க கட்சியொன்றின் பின்னணியிலேயே தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்பொழுது தயாராகியுள்ளதாகவும், இதில் அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் போலவே எதிரணியிலுள்ளவர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளன.

குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று(11) அல்லது அடுத்த வாரம் ஆரம்பத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

(rizmira)

Related posts

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக நாளை கூடுகிறது…

wpengine

சிறையில் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு – அறிக்கை கோரும் அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

SLBC தலைவர் தன்னிச்சையாக செயற்படுகிறார் – சபாநாயகர்..

wpengine