உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற ஆலோசனையின் பிரகாரம் மாகாண சபை தேர்தல்..



மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நேற்று(13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் எதிர்வரும் இரு ஆண்டுகளில் மூன்று வகையான தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளதெனவும் அந்த வகையில், அமைச்சரவையொன்று நாட்டில் இருந்தாலும் இல்லாவிடினும் தேர்தலை நடத்துவதற்கு எந்ததொரு தடையும் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணைக்கான இரண்டாம் கட்ட விடுமுறையில் மாற்றம்..

wpengine

அமைச்சர் ஹகீமிற்கு எதிராக வலுப்பெறுகிறது விசாரணை

wpengine

பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்க நடவடிக்கை…

wpengine