உள்நாட்டு செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை…


யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அவரது மெய்பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் குறித்த 3 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடனான பிணை நேற்று(19) வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 3 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும், 5 இலட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் 3 பேரும் வெளிநாட்டுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித

wpengine

அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் .. – போக்குவரத்துக்கு பாதிப்பு…

wpengine

தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு – சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு..

wpengine