உலக செய்திகள்

நிவாரண உணவு வழங்கலின்போது ஏற்பட்ட நெரிசலில் 15 பேர் பலி…



மொரோக்கோவில் நிவாரண உணவு விநியோகத்தின்போது நெரிசலில் சிக்கி 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

சிதி பவுலாலம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வறிய பெண்கள் உணவு பெறுவதற்காக ஒன்றுதிரண்டுள்ளனர்.

இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றால், கூடியிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மேலும் 40 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் உயிரிழந்த அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்று மொரோக்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவின் பின்தங்கிய பகுதிகளில் தனியார் தொண்டு அமைப்புகளால் இலவச உணவு விநியோகங்கள் வழங்கப்படுவது வழக்கமாக நிகழும் ஒன்றாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஐ.நாவின்  பொருளாதார தடைகளை  மீறி வடகொரியா அணுவாயுத பரிசோதனை

wpengine

பாகிஸ்தான் நிலநடுக்கம் : 300 இற்கும் மேற்பட்டோர் காயம்

wpengine

ஜப்பான் வானில் பறந்த வடகொரியா ஏவுகணை – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

wpengine