ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நிலைமை மோசம் – ராஜித சிங்கப்பூருக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனாரத்னவை சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மோசன் ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக அவரது சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக தெரிவித்திருந்தார்.

அவரது சட்டத்தரணி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலையின் வைத்திய அறிக்கையினையும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையின் வைத்திய அறிக்கை ஆகியவற்றை முன்வைத்து வெளிநாட்டு பயணத் தடையினை விலக்கிக் கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கடந்த 26ம் திகதி நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன, நேற்றைய தினம் சாதாரண வார்ட் இற்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அமைச்சரவை நியமன நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு…

wpengine

நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளருக்கு 5 வருடக் சிறை

wpengine

வெவ்வேறான உபாயங்களூடாக சமூக வலைதளங்கள் பாவிப்போர் கண்காணிக்கப்படுவர்..

wpengine