உள்நாட்டு செய்திகள்

நிலவும் சூழலில் புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை.. – அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்கள்..



நிலவும் தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று(18) புனித தலதா மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் – முக்கியமாக சட்டத் துறை சார் வல்லுனர்கள் – குறித்த இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில், தற்போது நாடு இருக்கும் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான தேவை எதுவும் இல்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் எதுவித மாற்றங்களையும் ஏற்படுத்தும் தேவை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்றும் அஸ்கிரிய – மல்வத்தை பீடாதிபதிகள் இணைந்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

கொன்சர்வேட்டிவ் கட்சி 326 இடங்களில் வெற்றி

wpengine

தென்னாபிரிக்க அணி 68 ஓட்டங்களால் முன்னிலையில்…

wpengine

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

wpengine