உள்நாட்டு செய்திகள்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிப்பு



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என, தெரியவந்துள்ளது.

இதன்படி, கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

அனைத்து பரீட்சைகளிலும் ஒரே சுட்டெண்…

wpengine

‘பொடி லெசி’ விளக்கமறியலில்

wpengine