உள்நாட்டு செய்திகள்

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 வரை பாடசாலை மாணவர்களை அதிக வியர்வை தரும் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காலநிலையினால் மாணவர்கள் அசௌகரியங்களுக்கும் உடல் நலக்குறைவுகளுக்கும் ஆளாகக் கூடும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாத்தறை மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

wpengine

தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்த 08 மாணவர்களுக்கும் விளக்கமறியல்…

wpengine

உணவுக்கு மாத்திரம் பெருந்தொகை பணத்தை செலவிடும் மக்கள்..!

wpengine