உள்நாட்டு செய்திகள்

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் பிணையில் விடுதலை



(FASTNEWS|COLOMBO) – மெகசீன் சிறைச்சாலையினுள் கைதிகளை கொலை செய்த சம்பவம் தொடா்பில் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலை அதிகாாி எமில் ரஞ்சன் லமகேவா ஆகியோர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்போது ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுவிக்கமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 27 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது

News Editor