உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நியூஸிலாந்து பிரதமரின் இலங்கை விஜயம்



பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார்.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்கிருயிருக்கும் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வர்த்தக சமூகத்தினரை கொழும்பில் சந்திக்கவுள்ளதுடன், இலங்கையில் நியூசிலாந்தின் புதிய முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளார்.

அத்துடன் அனைத்துலக ஜனநாயக ஒன்றியத்தின் நிறைவேற்று சபை கூட்டத்திற்கும் தலைமை தாங்கவுள்ளார்.

குறித்த சந்திப்பு குறித்து எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், நியூஸிலாந்து பிரதமர் எம்மை சந்திப்பது தொடர்பில் இது வரையில் உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

Related posts

“கிணற்றுத் தவளை என்ற நிலையிலேயே ஜே. வி. பி செயல்பாடு”:திஸ்ஸ அத்தநாயக்க எம். பி

News Editor

முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேறு நாளை 12 மணிக்கு பின்னர்

wpengine

உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு

Azeem Kilabdeen