உலக செய்திகள்

நியூயார்க் அருகே ரூஸ்வெல்ட் தீவில் ஹெலிகாப்டர் விழுந்ததில் இருவர் பலி…



அமெரிக்காவில் அருகே ரூஸ்வெல்ட் தீவில் புகைப்பட வல்லுனர்கள் சென்ற ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் நியூயார்க் அருகே ரூஸ்வெல்ட் தீவு உள்ளது. அங்கு புகைப்படங்கள் எடுக்க புகைப்பட வல்லுனர்கள் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அங்கு சென்று கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்தனர்.

ரூஸ்வெல்ட் தீவு அருகே சென்றபோது ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டு நியூயார்க் அருகே ஓடும் கிழக்கு ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மீட்பு பணியில் நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஹெலிகாப்டருடன் ஆற்றில் மூழ்கிய 3 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விமானி மட்டும் நீந்தி கரை ஏறினார்.

Related posts

அமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் இராஜினாமா…

wpengine

தென்கொரியாவில் 1,600க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இராஜினாமா..!

wpengine

‘கிறீன் கார்ட்’ லாட்டரியை அகற்றுகிறது அமெரிக்கா…

wpengine