உலக செய்திகள்

நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…


நியூசிலாந்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலநடுக்கம் காரணமாக பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியதனால் சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதுடன், சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை

Related posts

பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை – அமெரிக்கா நடவடிக்கை…

wpengine

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்

wpengine

ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்

wpengine