உள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சராக அமைச்சர் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்படலாம் என ஊகம்…?



பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தின் போது குறித்த இந்த மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகிறார்.

நிதியமைச்சு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிக்கவுக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.

எவ்வாறாயினும், நிதியமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்படமாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

இலங்கையர்களுக்கு ஜப்பானில் மேலும் வேலைவாய்ப்புகள்..!

wpengine

“வொக்ஸ்வெகன் நிறுவனம் முதலீடு செய்ததா இல்லையா என எம்மிடமே கேட்டிருக்கலாமே..” – பிரதமர்..

wpengine

அதிவிசேட வர்த்தமானி வெளியானது

wpengine