உள்நாட்டு செய்திகள்

நிசாந்த விக்கிரமசிங்கவுக்கு நாளை ஜனாதிபதி ஆணைக்குழு ஆணை



இலங்கை விமான சேவையில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் குறித்து அதன் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்கவிடம் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தியின் சகோதரரான இவர், கடந்த ஆட்சிக்காலத்தில் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டிருந்தார்.

அக்காலப் பகுதியில் நிறுவனத்தில் பாரிய நிதிமோசடிகள் மற்றும் பதவி உயர்வு மோசடிகள் இடம்பெற்றிருந்தன.

இன்னும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் வெற்றிக்காக உழைத்த கலைஞர்களின் பொதுக் கூட்டங்களுக்கு விமான சேவைகள் நிறுவனத்தினால் உணவு, பானங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

மேலும் நிறுவனத்தின் ஒருசில அதிகாரிகளை துணைக்குச் சேர்த்துக் கொண்டு பாரிய நிதி மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த விசாரணைகள் நாளை பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இதன்போது நிசாந்த விக்கிரமசிங்க மட்டுமன்றி விமான சேவை நிறுவனத்தின் மேலும் சில அதிகாரிகளும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மிலுக்கு பிணை.

wpengine

புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா..!

wpengine

சம்மாந்துறையில் இலஞ்ச ஊழல் பற்றிய பயிற்சி..!

wpengine