உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில்.. போக்குவரத்து ஸ்தம்பிதம்



இலங்கை போக்குவரத்து சபையின் நவலப்பிட்டி டிப்போ அதிகாரிகளும், ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர் ஒருவரை நேற்று(27) காய்கறி வியாபாரி ஒருவர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று(28) இவ்வாறு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய ஊழியர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஊழியரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசாங்க ஊழியரை தாக்கியமைக்கு எதிர்பு தெரிவித்துமே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தினால் நாவலப்பிட்டி பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான சகல அரச பஸ் வண்டிகளின் மார்க்கங்களுக்குமான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Related posts

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி

wpengine

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

wpengine

பாராளுமன்றில் சில முக்கிய இடங்களில் CCTV கெமராக்கள் பொருத்த நடவடிக்கை.

wpengine