உலக செய்திகள்

நாளை(25) முதல் பாவனைக்கு வரவுள்ள 200 ரூபாய் தாள்..



இந்தியா முழுவதும் நாளை(25) முதல் 200 ரூபாய் புதிய நோட்டுகள் பாவனைக்கு வரும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக 500 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்டது.

அந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நவம்பரில் 2000 ரூபாய் புதிய நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் 500 புதிய நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய நோட்டுகள் அறிமுகத்துக்கான ஒப்புதலை இந்திய நிதியமைச்சகம் அனுமதியுடன் பாரத ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு நேற்று(23) தெரிவித்திருந்தது.

இதையடுத்து நாளை(25) முதல் பாவனைக்கு வரவுள்ள 200 ரூபாய் புதிய நோட்டுகளின் மாதிரியை பாரத ரிசர்வ் வங்கி இன்று(24) வெளியிட்டுள்ளது.

 

Related posts

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

wpengine

இந்தியாவில் 5 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine

பனாமா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியதையடுத்து தனது வரி கணக்கை வெளி­யிட்ட பிரி­த்­தா­னிய பிர­த­மர்

wpengine