உள்நாட்டு செய்திகள்

நாளை வரை காற்றுடன் கூடிய காலநிலை…



நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை நாளை(11) வரை தொடர்ந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும். குறிப்பாக மேல்.தென். மத்திய. வட. வடமத்திய. மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு..!

wpengine

எனக்கு மருந்து கட்டுவதற்கே கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்- அமைச்சர் ரிசாத்

wpengine

உர மாபியாவில் இந்தியாவா? சீனாவா?

wpengine