Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை முதல் மின்சார சபை ஊழியர்கள் 3 நாள் போராட்டம்..!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

“.. இதை ரணிலுடன் சேர்ந்து விற்க காஞ்சன விரும்புகிறார். இதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றினால் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலை நிறுத்தம். இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.. நீங்கள் புறக்கணித்தால் காஞ்சனவுக்கு பகிரங்க சவால் விடுகிறோம். முடிந்தால் இதை பாராளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள். அன்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் வரவழைப்போம்..”

Related posts

அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

wpengine

IMF கடன் கிடைக்கும் திகதி அறிவிப்பு

News Editor

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல்…

wpengine