உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் மாத்தறைக்கு 1 1/2 மணித்தியாலங்களில் பயணிக்கலாம்



கடுவலையிலிருந்து கடவத்தை வரையிலான நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை, பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாளை (வியாழக் கிழமை) 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

8.9 கிலோமீற்றர் நீளமான கடுவலை – கடவத்த வெளிவட்ட வீதி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றோடு இணைக்கப்பட்டு, வாகனங்கள் கொழும்புக்கு வராமல் தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு இதனூடாக வழியேற்படுத்தப்படும்.

இதன் மூலம் கடுவலையிலிருந்து மாத்தறைக்கு சுமார் ஒன்றரை மணித்தியாலத்தில் பயணிக்க முடியும்.

Related posts

ரயில் சேவையில் பாதிப்பு

wpengine

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்வைப்பு இன்று(18)..

wpengine

வட் வரி மனு – இருதரப்பினரினதும் எழுத்துமூல காரணங்களை திங்களன்று சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை

wpengine