உள்நாட்டு செய்திகள்

நாளை காலை 9 மணி முதல் மின் விநியோகம் தடை…


கொழும்பின் சில பிரதேசங்களில் நாளை(27) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணி காரணமாகவே இவ்வாறு மின் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த பிரதேசங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படக்கூடும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்..!

wpengine

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

wpengine

ரணிலின் வீட்டிற்கு தீ – மூவர் கைது!

News Editor