உள்நாட்டு செய்திகள்

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன், இணைச் செயலர் புனித் அகர்வால், இயக்குநர் சந்தீப் குமார் பையப்பு, துணைச் செயலர் (இலங்கை), நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் ரகூ பூரி ஆகியோரும் வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்…

wpengine

கோட்டாபயவின் குடியுரிமை;  மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

அனைத்து இந்துக்களுக்கு, மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர்…

wpengine