உள்நாட்டு செய்திகள்

நாளை அதியுயர் வெப்பநிலை நிலவும் சாத்தியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பாகங்களில் நாளை(08) அதியுயர் வெப்பநிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய, மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனாராகலை மாவட்டங்களிலும் இவ்வாறு அதியுயர் வெப்பநிலை நிலவக்கூடும் என குறித்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், சுகாதாரத் துறையினரின் முன்னறிவித்தலுக்கு அமைய, அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, அதிக நீரை அருந்துவதுடன், கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலை தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக, பொதுமக்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரை அருந்த வேண்டும் என மருத்துவ நிபுணர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் கடமைகளில் 75,000 பாதுகாப்பு தரப்பினர்

wpengine

தம்புள்ளை நகர சபை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னனியின் உறுப்பினர் கைது

wpengine

அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

wpengine