உள்நாட்டு செய்திகள்

நாய்கள் ஜாக்கிரதை – பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு அபராதம்



நாய்களை பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதிலும் குறித்த உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தெரு நாய்களினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அபராதம் விதிப்பது குறித்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

Related posts

மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை சம்பவம் – காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது..

wpengine

தென்மாகாணத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல்…

wpengine