உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



(FASTNEWS|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குரித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று(03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவையாளரான பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்க உள்ளதால் இன்றைய விசாரணையை ஒத்திவைக்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள

wpengine

கடும் மழை, பலத்த காற்றுடன் கடலலைகளும் மேலெழுவது குறித்து விசேட அறிவித்தல்…

wpengine

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் DNA உறுதி

wpengine