உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமலின் வாகனம் குறித்து மஹிந்த வாய்திறந்தார் (VIDEO)


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டு பின்பு வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் மோட்டார் வாகனம் ஒன்றை நிதி மோசடி விசாரணை பிரிவு நேற்றைய தினம்(05) கைப்பற்றியிருந்தது.

அது குறித்து,அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கையில்,

“பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டதைப் போன்றே நாமலுக்கும் வாகனம் வழங்கப்பட்டது பின்னர் அவர் அதை விற்று விட்டார். அது தற்போது உரிமையாளரிடம் உள்ளது. பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் வந்து வாகனத்தை கொண்டு செல்லும் வரை குறித்த வாகனத்தின் தற்போதைய உரிமையாளருக்கு தெரியாது.

நாட்டில் அவ்வாறான சட்டங்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.நாளை உங்கள் வீட்டிற்கே வந்து உங்களுடைய கமராவை தூக்கிச் சென்றாலும் நீங்கள் வாய்மூடித்தான் இருக்க வேண்டும்.  தற்போது ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது ஆனால் பயத்தின் காரணமாக ஊடகவியலாளர்கள் வாய் திறப்பது இல்லை.

தற்போது ஊடகங்களின் தலைமைகளை அழைத்து வந்து பகிரங்கமாக திட்டுகின்றனர். தான் அவ்வாறு ஒரு போதும் செய்ததில்லை, அவ்வாறு செய்திருந்தால் பயப்படாமல் கூறுங்கள்..  தான் பாராளுமன்றில் கூட ஊடகவியலாளர்களை திட்டியது கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Lj1jUlCItSo” width=”560″ height=”315″]

Related posts

மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி [PHOTOS]

wpengine

2,500 ரூபாயை நிவாரணமாக வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் – பிரதமர்

wpengine

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் மூன் இலங்கை விஜயம்..

wpengine