ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நான் தயாரில்லை சஜித் அதிரடி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

தனது சுய கௌரவத்தை விற்பனை செய்து அதன் ஊடாக நலன் பெற்றுக்கொள்ளும் பழக்கம் தமக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபந்தனைகளின் அடிப்படையில் வேட்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் உத்தேசம் எப்பொழுதும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எந்வொரு காரணத்திற்காகவும் நாட்டையோ, கட்சியையோ, ஐக்கிய தேசிய முன்னணியையோ இழிவுபடுத்தும் வகையில் அவற்றின் கௌரவத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் குழாமில் சுரங்க லக்மாலுக்கு அழைப்பு…

wpengine

சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்டமூலம்! மோதிக்கொண்ட பிரபல அமைச்சர்கள்

wpengine

முதலாம் திகதி முதல் யாசகத்திற்கான தடை அமுலுக்கு…

wpengine