உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான் டுபாய் செல்லவில்லை மறுக்குறார் விமல் வீரவன்ச



டுபாயில் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவினால் பேணப்பட்டு வரும் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் தூது சொல்வதற்காகவே தாம் டுபாய்க்கு செல்ல முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார்.

இரண்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்ச அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் தம்மைப்பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை ஜேவிபியினரே பரப்புவதாக வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் தலைமைத்துவம் குழப்பிவிட்டு அதில் மீன்பிடிக்க முனைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபியினால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்றில் வீரவன்ச, ஐரோப்பியா சென்று அங்கிருந்து டுபாய்க்கு செல்ல முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் டுபாயின் வங்கியில் வைத்திருப்பதாக கூறப்படும் 500 மில்லியன் டொலர்கள் தொடர்பில் தூது ஒன்றை அவர் எடுத்துச்சென்றதாகவும் ஜே.வி.பியின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் தமது அரசியல் வாழ்க்கையை நாசப்படுத்த ஜே.வி.பி முனைவதாக வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

மது போதையில் வாகனம் செலுத்திய 420 பேர் கைது

wpengine

600 மில்லியன் வருமானத்தை ஈட்டிய இ.பொ.ச

Azeem Kilabdeen