உள்நாட்டு செய்திகள்

நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் – சங்கா திட்டவட்டமாக அறிவிப்பு…


அரசியலுக்கு தான் ஒருபோதும் வரப்போவதில்லை என்றும் அது தொடர்பில், தனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லையென்றும், இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் சமூக வலைத்தளத்தில், அரசியல் பிரவேசம் தொடர்பான பதிவொன்றை இட்டுள்ள குமார் சங்கக்கார, தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியாகிவரும் செய்திகளைக் கருத்திற் கொண்டே, தான் இந்தப் பதிவை இடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் பின்னர், பல வருடங்களாகத் தனக்காக அர்ப்பணித்த தனது குடும்பம் மீதே, தான் தற்போது முழுமையான அவதானம் ​செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு விதத்திலும், தனக்கு அரசியல் தொடர்பான ஈடுபாடு இல்லையென்றும் அரசியலும் மக்கள் சேவையும், மிகவும் பொறுப்புடன் செய்யக்கூடியவை என்றும், குமார் சங்கக்கார மேலும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

wpengine

கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வுகள் சுப நேரத்தில் ஆரம்பம்

wpengine

ஐ.தே.கட்சியின் சார்பில் போட்டியிட பத்தாயிரம் போ் விண்ணப்பம்…

wpengine