உள்நாட்டு செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை..


தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் நேற்று(06) இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

மாத்தறை, தொட்டமுன, தெவிநுவர, வல்கம, பீக்வெல்ல மற்றும் பொல்ஹதுமோதர ஆகிய பிரதேசகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பீக்வெல்ல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளன.

நில்வளா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு நேற்று மாலை விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

இன்று முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை ஆரம்பம்…

wpengine

35 வயதிற்கு குறைவு எனின் முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை…

wpengine

பா.உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு..

wpengine