உள்நாட்டு செய்திகள்

நானும் தந்தையும் ரஜினி ரசிகர்கள்; நாமல் வெளியிட்ட கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எந்தத் தடையுமில்லை, அது குறித்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என நாமல் ராஜபக்ஸ  தெரிவித்துள்ளார். 

நாமல்  ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்க பதிவில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை. அது குறித்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை.

நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, அரசியல், சினிமா குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறும், அங்கு உள்ள தமிழ் மக்களைச் சந்திக்குமாறும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டதாகவும், அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை இலங்கை அரசு மறுத்தது. மேலும், ரஜினி தரப்பு மறுத்தது.

இந் நிலையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டண அதிகரிப்பு குறித்து அரசுக்கு வேண்டுகோள்..

wpengine

கொஸ்கொட சுஜீவ’வை கைது செய்ய சிவப்பு அறிக்கை…

wpengine

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine