உள்நாட்டு செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 10 நாள் காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதோடு, ஒரு நாள் சேவையின் கீழ் 12,158 பேரும் பிராந்திய அலுவலகங்களில் 10,145 பேரும் விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது…

wpengine

ஜனரஞ்சக வீரர் விருதிற்கு ஏஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை…

wpengine

வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்

wpengine