Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டை முழுமையாக முடக்க தீரமானம் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதை அவதானித்ததாக கூறிய அமைச்சர், இலட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் இல்லாமல் போனதாக கூறினார்.

இலங்கை போன்று பாரியளவில் கடன் சுமையால் நசுக்கப்பட்டுள்ள நாட்டை, முழுமையாக முடக்குவதாக இருந்தால், அதற்கான பொருளாதார பலம் இல்லை. முடக்குவதற்கான செய்வதற்கான தேவை இருக்கின்ற போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டை முடக்காமல், திறந்து வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கவே முயற்சிப்பதாகவும் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய சவாலே தற்போது உள்ளதாகவும் ஆகையால் இயலுமானவரை நாட்டை திறந்து வைத்து, நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

wpengine

சபாநாயகர் கையெழுத்திட்டார்

wpengine

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள்

wpengine