உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோருக்கு உளவியல் ரீதியிலான நோய்



(FASTNEWS | COLOMBO) – நாட்டின் குடிசன கட்டமைப்பு மற்றும் நோயின் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கம் மாற்றமின்றி இருப்பதுடன் இந்நிலைமையை எதிர்கொள்வதற்காக சுகாதார சேவை வழங்கும் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது.

தற்பொழுது நாட்டில் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதமானோர் உளவியல் ரீதியிலான நோயினால் இருப்பதாகவும் இவர்கள் மத்தியில் 40 சதவீதமானோர் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு உளவியல் ரீதியிலான நோய் குறித்து பிரச்சினைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கில் உளவியல் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளது.

இதற்கமைவாக 503 மில்லியன் ரூபா செலவில் கண்டி போதனா வைத்தியசாலையில் புதிய உளவியல் சிகிச்சை கட்டிடத் தொகுதி மற்றும் 218.8 மில்லியன் ரூபா செலவில் சிலாபம் மாவட்ட பெரிய ஆஸ்பத்திரிக்காக உளவியல் சிகிச்சை அலகொன்றை அமைப்பதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

உர மாபியாவில் இந்தியாவா? சீனாவா?

wpengine

நாளை முதல் மாலை வேலைகளில் மழை பெய்யக்கூடும்…

wpengine

இலங்கையில் முதல் முதலாக தமிழில் மொழி மாற்றம் செய்த சட்டத் தொகுதி ஏற்பு…

wpengine