உள்நாட்டு செய்திகள்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..



நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரளவு மழைபெய்யும் எனவும் குறிப்பாக வட – மத்திய மாகாணம் , மாத்தளை , மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கடும்மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(12) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை

wpengine

மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை..!

wpengine

ட்ராவிஸ் சின்னையாவுக்கு, அட்மிரலாகப் தரம் உயர்வு..

wpengine