உள்நாட்டு செய்திகள்வணிகம்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலைக்கு இந்தோனேசியா உதவி…



நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 5,000 மெட்ரிக் தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

ஐனாதிபதி காரியாலயத்தில் நேற்று(23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய வௌவிவகார பிரதி அமைச்சர் எ.எம்.பஷீர் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி , இந்தோனேஷியா அரசால் இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கவுள்ள உதவி தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் , இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடா , அந்நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துள்ளதாக இதன் போது கருத்து தெரிவித்த இந்தோனேஷிய வௌிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

வெலிக்கடைச் சிறைச்சாலை காணி விற்பனைக்கு – அஜித் பெரேரா

wpengine

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்…

wpengine

இராஜாங்க அமைச்சரை பதவி நீக்குமாறு சஜித் கோரிக்கை

wpengine