உள்நாட்டு செய்திகள்

நாட்டில் நிலவும் வறட்சியினால் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுமா.?



நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி நிலையானது ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் மழை கிடைக்கவில்லை என்றாலும் மின்சாரம் தடைப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.

அத்துடன் மின்சார கட்டணம் உயர்த்தப்படாதென மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு விசேட பரிசு வழங்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாதாரண மின்குமிழ்களுக்கு பதிலாக LED மின்குமிழ்களை இலவசமாக வழங்குவதற்கான யோசனையை விரைவில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இராணுவத்தினரை கௌரவப்படுத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

wpengine

அரசு ஊழல் செயலகத்தின் காலத்தை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணத்தை தெரிவித்தார் சுனில்..

wpengine

சஜினுக்கு எதிரான வழக்கு பெப். 25 தொடக்கம் விசாரணைக்கு

wpengine