உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட புனித தலங்களுக்கு இலவசமாக சூரிய மின் தகடு



நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புனித தலங்களுக்கு இலவச சூரிய மின்தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும் 2 Kw அடங்கிய சூரியமின் தகடுகளே வழங்கப்படவுள்ளதாகவும், இந்த மின்தகடு ஒன்றிற்காக 6 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த செயற்திட்டமானது மின்சக்தி அமைச்சின் வழிகாட்டலுடன் நிலையான வலுசக்தி அதிகாரிகளால் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் தற்போதும் 50 வீதமான மின்சாரத்தினை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமே பெறுகிறோம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே படிம எரிபொருட்களைப் பாவிப்பதால் பல எதிர்மறையான வாயுக்கள் சுற்றாடலில் கலப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதுடன், இதனால் அந்நியச்செலாவணி செலவு குறைவடைவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கும், சுற்றாடலை பாதுகாக்கவும் குறித்த இந்த சூரிய மின்தகடு பாவனையை உபயோகிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எமது நாட்டிற்கு வருடத்தில் அதிகமான நாட்களுக்கு சூரிய ஒளி கிடைப்பதனால் குறித்த சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுற்றிவளைப்புக்களில் 389 பேர் கைது

wpengine

மதுபான விற்பனையில் ஈடுபட்ட 146 பேர் கைது

wpengine

இலங்கையிலும் மின் புகையிரத போக்குவரத்து…

wpengine