உள்நாட்டு செய்திகள்

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அறுவருக்கு விளக்கமறியல்..



சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 06 பேர் சிலாபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 22 – 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் 28 வயதுடைய முந்தலம் பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

திஸ்ஸ இலஞ்ச மற்றும் ஊழல் பிரிவில்

wpengine

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

wpengine

தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி

wpengine