உள்நாட்டு செய்திகள்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காதவிடத்து ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு…

wpengine