உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

டுவிட்டரில் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ!

wpengine

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்…

wpengine

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்

wpengine