உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, தென்,மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் ஏறத்தாழ 100மி.மீ அளவான கடும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் சபாநாயகர் இலங்கை விஜயம்…

wpengine

களு கங்கை அண்டிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பருகுவதற்கு உகந்ததல்ல..

wpengine

பாராளுமன்ற மோதல் நிலைமை தொடர்பான அறிக்கை பாராளுமன்றுக்கு…

wpengine