உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி



(FASTNEWS|COLOMBO) – நாட்டின் வட அரைப்பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் சிறிது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எத்ரிவு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

மேலும் சில உற்பத்திகளுக்கு வரி விதிக்க தீர்மானம்

wpengine

சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று  கொழும்பை வந்தடைகின்றது

wpengine

மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Azeem Kilabdeen