உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்



(FASTNEWS|COLOMBO) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 – 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

wpengine

முல்லைத்தீவு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் சுயதொழில் மேற்கொள்வோருக்கான புதிய கடன் திட்டம் அறிமுகம்

wpengine

கைது செய்யப்பட்டு 5 வது நிமிடம் விடுதலை

wpengine